மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம் – வைகோ

Mallai Sathya removed from MDMK

சென்னை, செப்டம்பர் 08:

மதிமுகவில் பல நாட்களாக நிலவி வந்த உள்கட்சித் தகராறு உச்சத்தை எட்டியுள்ளது. கட்சியின் துணை பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்த மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

வைகோவும், முதன்மை செயலாளர் துரை வைகோவும், மல்லை சத்யாவும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன், மல்லை சத்யா தன்னை ஏமாற்றிவிட்டதாக வைகோ குற்றஞ்சாட்டினார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போலவே, போராட்டங்களில் நீண்ட காலம் தன்னுடன் இருந்த சத்யா துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் பேசியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, வைகோ தன்னை துரோகி எனக் குறிப்பிட்டதை கண்டித்த மல்லை சத்யா, “அப்படியே இருந்தால் விஷம் குடித்து உயிரை மாய்த்திருப்பேன்” என பதிலளித்தார். பின்னர் நீதிக்காக சென்னை மக்கள் மன்றத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் சத்யா மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கட்சிக்கு அவப்பெயர் விளைவித்ததாகக் குற்றம் சாட்டி முதலில் தற்காலிக நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்சிக் கடமைகள், உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்தச் சூழலில், அந்த தற்காலிக நீக்க முடிவை மாற்றி, மல்லை சத்யாவை இப்போது நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!