பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்

Makkal Needhi Maiam applies to the EC for a public symbol

சென்னை, நவம்பர் 12:

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முனைந்து அரசியல் கட்சிகள் பரபரப்பாகத் தயாராகி வரும் நிலையில், கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 பொதுச் சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ஒதுக்குமாறு கட்சி அதிகாரிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று விண்ணப்பித்தனர்.

மக்கள் நீதி மய்யம் பிரதிநிதிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகளை நேரில் சந்தித்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.

முன்னதாக, 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு “டார்ச் லைட்” சின்னம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது பொதுச் சின்னம் பெறுவதன் மூலம் தேர்தலில் தனித்துவம் வகிக்கும் முயற்சியில் உள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!