தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரித்தார். சென்னை சென்டிரலில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அவர் பயணிகளுடன் கலந்துரையாடி, வாக்கு சேகரித்தார். பின்னர் பயணிகளுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்.
