மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடல் முதலில் சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின்னர், உடல் கோபாலபுரம் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்துக்குப் பிறகு, அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
மு.க.முத்து திரையுலகிலும், இசை வாழ்விலும் சிறிது காலம் தனது பங்களிப்பை வழங்கியவர். குறிப்பாக, 2006-ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான “மாட்டு தாவணி” திரைப்படத்தில் தேவா இசையில் நாட்டுப்புற பாடல் ஒன்றை பாடினார். பிறகு அவர் சினிமாவில் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை.
மு.க.முத்து மறைவு செய்தி தெரியவரும் உடனே திமுக மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனே நிகழ்வுகளை ரத்து செய்து அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா எழுதிய “அவரும் நானும்” என்ற புத்தக வெளியீட்டு விழா ஆகியவை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன.
மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.