9
தூத்துக்குடி, ஜூலை 4:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7 ஜூலை 2025 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வரும் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
ஆனால், அதே நாளில் அரசு தேர்வுகள் நடைபெற இருந்தால், அந்த தேர்வுகளில் பங்கேற்பவர்கள், மாணவ\மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் விடுமுறையைப் பெறமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7-ஆம் தேதி விடுமுறைக்குப் பதிலாக 19 ஜூலை 2025, மூன்றாம் சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.