தஞ்சாவூருக்கு வருகிற 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை

Local holiday for Thanjavur on the 2nd

தஞ்சாவூர், பிப்ரவரி 26:

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக பெருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாசிமக பெருவிழாவும் சிறப்பு பெற்றதாகும். மாசிமக நாளன்று மகாமக குளத்தின் கரையில் சிவன்கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கும்பகோணம் பகுதிகளில் உள்ள காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வருகிற 2-ந்தேதி மகாமக குளத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மாசி மகத்தையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு வருகிற மார்ச் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து, ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, மார்ச் 14-ந்தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!