நாகை மாவட்டத்திற்கு டிசம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Local holiday declared for Nagapattinam district on Dec.1st

நாகை, நவம்பர் 24:

நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற்று வரும் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 1-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு, ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மத நல்லிணக்கத்தின் அடையாளமாகப் போற்றப்படும் இந்த தர்காவில் நடைபெறும் பெரிய கந்தூரி விழா, ஆண்டு தோறும் மிகுந்த கோலாகலத்துடன் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 469-வது பெரிய கந்தூரி விழா, கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. மறுநாள் (டிசம்பர் 1) அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், கந்தூரி விழாவும் நடைபெறவிருக்கின்றன.

தர்காவின் தலைமை அறங்காவலர் செய்யது முகம்மது காஜி ஹு சாஹிப் மற்றும் டிரஸ்டி குழு விழா ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மாவட்ட மக்கள் அதிக அளவில் திரளக் கூடும் என்பதினால், டிசம்பர் 1-ம் தேதியை நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இதற்கிடையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 13-ம் தேதி பணி நாளாகச் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை