இருள் நிறைந்த அரசியலுக்கு மத்தியில் நியூயார்க்கில் ஒளி : மம்தானி

Light in New York amidst dark politics: Mamdani

நியூயார்க், நவம்பர் 05:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரடியாகச் சுட்டி விமர்சித்து, நியூயார்க் நகரமே அவரால் உருவாக்கப்பட்டதைவிட உயர்ந்தது என கூறி அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார் இந்திய வம்சாவளி நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானி.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்று நியூயார்க் மேயராக தேர்வான அவர், பொதுமக்கள் மத்தியில் வெற்றியுரையாற்றியபோது மேடையே அதிர்ந்தது.

அந்த உரையில் ஸோரான் மம்தானி கூறியதாவது, “அதிபர் டிரம்ப், நீங்கள் இதைக் காண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எனவே, சற்று ஒலியை அதிகரிக்கவும்.

நீங்கள் உருவாக்கிய நகரமே இன்று உங்களை தோற்கடித்துள்ளது. இருளால் சூழப்பட்ட அரசியலுக்குள் நியூயார்க் ஒளியாக மாறியுள்ளது,” என்றார்.

அவரது இந்த சொற்கள் அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. “ஸோரான்! ஸோரான்!” என்ற கோஷங்கள் முழங்க, நிகழ்ச்சி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஸோரான் மம்தானியின் உரையை ஒட்டி அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூக வலைத்தளத்தில், “இப்படித்தான் அது தொடங்கும்” என டிரம்ப் பதிவிட்டார்.

அதன் மூலம் டிரம்ப் தனது அரசியல் பதிலடி ஆரம்பிக்கப்போகிறார் என்ற சைகையாக இது பார்க்கப்படுகிறது.

Related posts

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம்: டொனால்டு டிரம்ப்

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம்

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி