அய்யா வைகுண்டரின் சமத்துவம் பேணுவோம்! – முதலமைச்சர் வாழ்த்து!

Let's maintain the equality of Ayya Vaikundar! - CM greetings!

சென்னை, மார்ச் 04:

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டா் அவதார நாளையொட்டி, அய்யா வழி பக்தா்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தமிழக முத‌லமைச்சர் மு.க.‌ஸ்​டா​லி‌ன் வெளி​யி‌ட்ட வா‌ழ்‌த்​து‌ச் செ‌ய்​தி​யி‌ல், இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

“கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்” எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என‌‌க் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் இன்று தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டம்!

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி