அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

Let us pledge to protect the dignity of the Constitution: Vijay

சென்னை, ஜனவரி 26:

குடியரசு நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசின் விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!