நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக்குழு அமைப்பு

Legislative Election Management Committee form under the leadership of Nainar Nagendran

சென்னை, பிப்ரவரி 12:

தமிழக பாஜக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் அமைப்பாளராக பொன்.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இணை அமைப்பாளர்களாக எஸ்.ஆர்.சேகர், ஆர்.என்.ஜெயப்பிரகாஷ், மா.வெங்கடேசன், மாலா செல்வகுமார், எஸ்.ஆர்.ராமப்பிரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!