தெருநாய் கடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

boy dies after bitten by a dog

கிருஷ்ணகிரி, செப்டம்பர் 17:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான கூலி தொழிலாளி முனி மல்லப்பா, கடந்த மூன்று வருடங்களாக முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி இரவில் தோட்டம் அருகே உள்ள நாயை அடிக்க முயன்றபோது அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்துள்ள்து.

அவருடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் முனியை மீட்டு, தென்கனிக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்குள் வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முனி மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!