திருப்பத்தூர், செப்டம்பர் 24:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பவள தெருவை சேர்ந்த வேணுவின் 4 வயது மகனை மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். நேற்று மதியம் வேணு தனது மகனை பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்த போது இந்த சம்பவம் நடந்தது. வீட்டு வாசலில் மகனை இறக்கி இருசக்கர வாகனத்தை உள்ளே கொண்டு சென்ற வேணுவை காரில் வந்த மர்ம கும்பல் வேணுவின் மகனை கடத்தி சென்றனர். கடத்தலை தடுக்க முயன்ற வேணுவின் முகத்தில் மிளகாய் பொடி வீசியுள்ளனர்.
இது குறித்து வேணு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கர்நாடகா பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்திச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த 4 வயது சிறுவன் இன்று திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே தேவிகாபுரம் பகுதியில் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
குழந்தையை கடத்தியவர்கள் மீது தீவிரமாக தேடுதல்-வேட்டை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.