கரூர் கூட்ட நெரிசல்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

Karur stampede - CBI summons to TVK Vijay

டெல்லி, அக்டோபர் 10:

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27-ல் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நிகழ்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசாரணையில் தவெக தரப்பினர் பல முக்கிய வாதங்களை முன்வைத்துள்ளனர். விசாரணை நடந்த நேரத்தில் கட்சித் தலைவர் விஜய் கூட்டம் நடைபெற்று வரும் இடத்தில் இருந்தார். சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட வேண்டிய நிலையில், போலீசார் தான் விஜய்க்கு அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, காவல் அதிகாரிகளின் ஆலோசனையே காரணமாக விஜய் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தின் பாதிக்கப்பட்டோர் தவெக உறுப்பினர்களின் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தவெக தரப்பினர் நியாயமான, எந்தக் கட்சியையும் சாராத விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தற்போது தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைத்த விசாரணை குழுவால் விசாரணை நடக்கிறது.

ஆனால், தவெக தரப்பினர் மாநில அரசாங்கத்தின் விசாரணைக் குழுவில் நம்பிக்கை இல்லாமல், சிபிஐ மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கோரிக்கை வைத்துள்ளனர்.

செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததும், 60 பேர் பலத்த காயங்கள் பெற்றனர். இது தொடர்பான விசாரணை பணிகள் சிறப்பு விசாரணைக் குழு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது, உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை