கரூர் பலி: பொறுப்புணர்வுடன் அனைவரும் செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின்

Karur issue Let us all act responsibly - M.K. Stalin

சென்னை, அக்டோபர் 15:

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!