கரூர், செப்டம்பர் 29:
கடந்த வாரம் கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்பு தொகை முதலில் குறைந்ததாக இருந்தது, ஆனால் படிப்படியாக அதிகரித்து 41 ஆக உயர்ந்தது.இந்த நிலையில் கரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மற்றும் தனியார் மருத்துவமனையில் சுமார் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலைமையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, த.வெ.க. தலைவர் விஜயை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுகூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.