கல்வி நிதியை தவிர அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் காட்டும் மத்திய அரசு – கனிமொழி

Cancellation of suburban trains: Kanimozhi condemns

சென்னை, டிசம்பர் 31:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,

திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை