47
சென்னை, நவம்பர் 13:
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் நவம்பர் 21-ம் தேதி மாலை 4 மணிக்கு ‘கடலம்மா மாநாடு’ நடைபெறவுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆதி நீயே! ஆழித்தாயே!” என்ற முழக்கத்தின் கீழ் ‘கடலம்மா மாநாடு’ நடைபெறும் என கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள், அனைத்து பாசறை தலைவர்கள், நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடலோரப் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் காப்பு, மற்றும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்து சிறப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.