ஜாய் கிரிசில்டா புகார்: மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன்

Joy Crisilda complaint: Police summons Madampatti RangarajJoy Crisilda complaint: Police summons Madampatti Rangaraj

சென்னை, செப்டம்பர் 24:

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் உள்ள தகவல்களும் ஜாய் கிரிசில்டா வெளிப்படுத்தி உள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. துணை ஆணையர் வனிதா ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அதன்பின்னர், நீலாங்கரை காவல் நிலையம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு வரும் 26-ஆம் தேதி நேரில் ஆஜராக விசாரணையில் கலந்துகொள்ள சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

Related posts

ரஜினி – கமல் படத்தின் புரோமோ!

மகா சிவராத்திரி விழா – நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி, சாரா பங்கேற்பு

“ஜனநாயகன்” படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்