பீகார் தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் 57 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது

Janata Dal releases list of 57 candidates

பாட்னா, அக்டோபர் 15:

பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 11 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.

இந்த நிலையில் பீகார் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட ஐக்கிய ஜனதா தளம் 57 பேர் அடங்கிய வேட்பாளர்களின் பட்டியலை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் நிதீஷ் குமார் வெளியிட்டார்.

மஹானர் தொகுதியில் ஜேடியு மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாஹா, பிகார் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார், போரே (எஸ்சி)-க்கு சுனில் குமார் உள்ளிட்டோரை கட்சி அங்கீகரித்தது.

முன்னதாக, பாஜக பீகார் தேர்தலுக்கான 71 வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஜேடியு அறிவித்த 51 தொகுதிகளில் லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கேட்டிருந்த 4 இடங்களும் அடங்கும்.

பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு