15
டெல்லி, ஜனவரி 30:
ஜனநாயகன் பட தணிக்கைச் சான்று விவகாரத்தில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்கிற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் அமர்வு அண்மையில் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இவ்வழக்கை தனி நீதிபதி ஆஷா மீண்டும் விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பட நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தங்களின் வாதத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனால் ஜனநாயகன் பட படத்துக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது-