மதுரை, ஆகஸ்ட் 06:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்களை சேர்ப்பது தவறான செயல் என்றும், அதுவே ஊழலின் ஒரு வடிவம் என்றும் தெரிவித்துள்ளார்.
“வட இணைந்த மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பு தவறு. இது மேற்கு வங்கம் போன்ற நிலைமையை உருவாக்கும். எத்தனை லட்சம் சேர்த்தாலும், தமிழகத்தில் ஆட்சிப் மாற்றம் உறுதி. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன; மக்கள் வெறுப்புடன் உள்ளனர். அந்த வெறுப்பால் அரசு மாற்றம் வருவது உறுதி.”
அவர் திருப்பூரில் நடந்த சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொலை சம்பவத்தையும் குறிப்பிட்டு, “தமிழக காவல்துறைக்கு பாதுகாப்பில்லை. ஆனால் முதல்வர் அதை கவனிக்கவில்லை மற்றும் அவ்வாறான விஷயங்களை ஆய்வு கூட்டத்தில் பேசுவதில்லை, இந்த ஆட்சி ஒரு மோசமான ஆட்சியாக உள்ளது”என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் காட்டிய குறுஞ்செய்திதான் ஆதாரமா? என்று கேட்டதற்கு ‘அதை அவரிடமே கேளுங்கள்’ என்று தெரிவித்தார்.