தவெக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான் – பிரவீன் சக்ரவர்த்தி

It is true that I met with TVK leader Vijay - Praveen Chakravarthy

கோவை, ஜனவரி 07:

கோவை விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  • உத்தரபிரதேசம் பற்றி ஒப்பிடவில்லை. தமிழ்நாடு அரசின் கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்ததையே கூறினேன்.
  • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான்.
  • தனிப்பட்ட முறையில் சந்திப்பதில் எந்த பிரச்சனையுமே இல்லை.
  • கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.
  • விஜயின் பிரசாரத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகின்றனர். அதில் இருந்து மக்களின் எண்ணம் தெரிகிறது.
  • அது ஒரு சக்திதான். அதை யாராலும் மறுக்கவே முடியாது. த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டில் அரசியல் சக்தியாக உருவாகி விட்டார்.
  • அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இது காங்கிரஸ் தொண்டனின் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக, எதிர்காலத்திற்காக கோரிக்கை என்று அவர் கூறினார்.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக