சென்னை, ஜூலை 8:
உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, இந்தியன் பிரிமீயர் லீக்-கின் பிராண்ட் மதிப்பு இந்த ஆண்டு 12.9% உயர்ந்து 18.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாக தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட 13.8% அதிகரித்தும், இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
My11Circle, Angel One, RuPay மற்றும் CEAT போன்ற அசோசியேட் ஸ்பான்சர்களிடம் விற்பனை செய்ததன் மூலம், பிசிசிஐ-க்கு ரூ.1,485 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய சுற்று ஒப்பிடுகையில் 25% அதிகமாகும்.
இந்த நிலையில் டாடா குழுமம் தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028 வரை நீட்டித்து, 300 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2,500 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது. மேலும் ஆர்சிபி அணி 2024-ல் 227 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலிருந்து தற்போது 269 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.மும்பை இந்தியன்ஸ் 242 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இரண்டாம் இடமும், சென்னை சூப்பர் கிங்ஸ் 235 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் அணியின் பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39.6% உயர்ந்துள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் மற்ற அணிகளைவிட அதித வளர்ச்சியாகும்.