சென்னை, பிப்ரவரி 12:
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், முதலீடுகள் தொடர்பான செயலாக்க மாநாடு தொடங்கியது.
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் கெயிட்டன்ஸ் தமிழ்நாடு சார்பில் நடைபெறும் கன்வர்ஷன் கான்கிளேவ் 2026 மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக ஆட்சியில் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தது தொடர்பாக மாநாடு நடைபெறுகிறது. 71 புதிய முதலீடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் 62 தொழில் நிறுவன திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.
புதிதான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகிறது.