பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், இந்தியாவில் தனது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, கூகுள் தேடலில் தற்போது AI மோடு மற்றும் AI ஓவர்வியூ என்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த அம்சங்கள் மூலம் பயனர்கள் தேவையான தகவல்களை சில நொடிகளில் பெற முடியும். AI மோடு மூலம் கூகுள் தேடலில் கேள்வியை உள்ளீடு செய்து, அதற்கான விரிவான, துல்லியமான பதிலை பெறலாம். இதேபோல், கூகுள் மேப் செயலியும் AI தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றது. கூகுள் தேடல், கூகுள் செயலி மற்றும் கூகுள் லென்ஸ் மூலம் உங்கள் கேள்விகளை தட்டச்சு, குரல் அல்லது புகைப்படம் மூலமாக கேட்கலாம். இதில் நீண்ட மற்றும் விரிவான கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும்.
இதனுடைய சிறப்பு அம்சங்களில் ஒன்று, கேள்விகளுக்கு அனுகூலமாக தேவையான தகவல் மற்றும் தொடர்புடைய இணையதள இணைப்புகளை வழங்குவதாகும். மேலதிக தகவல் தேவைப்பட்டால் அந்த இணையதளங்களை பார்க்கலாம். மேலும், படிநிலைகளாக விளக்கங்கள் தேவையானவருக்கு விரிவான வழிமுறைகளையும் வழங்குகிறது. தற்போது இந்த AI அம்சங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன; இந்திய மொழிகளில் விரைவில் கிடைக்கும் வகையில் வேலை நடைபெற்று வருகிறது. கூகுள் கணக்கு இல்லாமலே இந்த சேவைகளை பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
மேலும் இந்த AI தொழில்நுட்பம் சில நேரங்களில் தவறான முடிவுகள் வரும் போதும், காலப்போக்கில் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்கள் தகவல்களை வேகமாக மற்றும் எளிதாக பெற முடியும் என்பதால், கல்வி, பயணம், பொருட்கள் ஒப்பிடல் போன்ற பல துறைகளில் இதன் பயன்பாடு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.