பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்: பகவந்த் மான்

introduce breakfast scheme in Punjab too: Bhagwant Mann

சென்னை, ஆகஸ்ட் 26:

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், “தமிழ்நாடு மாதிரி, பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட’ விரிவாக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான்ர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவையும் உண்டார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பகவந்த் மான் , “பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளால் கல்வியில் முன்னேற்றம் காண முடியாது. எனவே, காலை உணவுத் திட்டம் போல் சிறந்த திட்டமே இல்லை. சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. குழந்தைகளின் உடல்நலத்தில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது.

பஞ்சாபில் அனைத்து நகரங்களிலும் தென்னிந்திய உணவுகளான உப்புமா, தோசை போன்றவை விற்கப்படுகிறது. தென்னிந்திய உணவுகள் தேசிய உணவு போல், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. பஞ்சாப் உணவுகள் தமிழகத்திலும் விற்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கல்வி, சுகாதாரத்துக்கு பஞ்சாப் அரசும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கிளினிக்களில் 70,000 பேர் நாள்தோறும் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள்.

நாளையே பஞ்சாப் அமைச்சரவையில் காலை உணவுத் திட்டம் குறித்து விவாதிக்கவுள்ளேன். குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம், அவர்களால்தான் நாடு முன்னேறும். அப்போதுதான் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும், வெறும் பேச்சுகளால் முடியாது. ” எனத் தெரிவித்தார். மேலும், சமூகம், கல்வி, ஆரோக்கிய வளர்ச்சி குறிப்பிடப்படும் இந்த சந்திப்பில், “பகத்சிங், ராஜகுரு போன்ற வீரர்களை பொறுத்த பஞ்சாப் மண்ணை காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் வர வேண்டும்” என பகவந்த் மான் அழைப்பு விடுத்தார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!