யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் – நயினார்

International Mother Language Day - Nainar congrats

சென்னை,பிப்ரவரி 21:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது, யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!

என்ற முண்டாசு கவிஞன் பாரதியாரின் வரிகளை போற்றும் வகையில் இன்று உலகத் தாய்மொழி தினத்தில் உலகத் தமிழர் அனைவருக்கும் என் இனிய தாய்மொழி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழி என்பது சொற்கள் மட்டும் அல்ல, அது நம் சிந்தனை, பண்பு, வரலாறு மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம் அதை காக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. நம் தாய்மொழியை நேசித்து, பேணி வளர்த்தால் தான் நம் அடையாளம் என்றும் நிலைத்திருக்கும்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை