2-வது டெஸ்டில் இந்தியா படுதோல்வி – ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா

India defeat in 2nd Test – whitewashed by South Africa

கவுகாத்தி, நவம்பர் 26:

கவுகாத்தியில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 489 ரன்கள் குவித்தது. இதில் செனுரன் முத்துசாமி 109 ரன்களின் அரைசதம் அடித்தார்.

அதன்பின் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்களில் 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்தியாவின் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாம் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்த பின்னர் டிக்ளேரு செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆன கே.எல். ராகுல் 6 ரன்களில் நடையை கட்டினார்.4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் இருந்தனர்

இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
குல்தீப் யாதவ் 5 ரன்களும் , துருவ் ஜூரேல் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .

பின்னர் வந்த ரிஷப் பண்ட் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.பின்னர் நிலைத்து ஆடிய சாய் சுதர்சன் 13 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா மட்டும் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார் . அவர் 54 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் இந்திய அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ஹார்மர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் . இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா , இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது .

Related posts

மகளிர் பிரீமியர் லீக் – டெல்லியை வீழ்த்தி 2-வது கோப்பையை வென்ற பெங்களூரு

இந்தியா உடனான போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்! ஐசிசி எச்சரிக்கை!

விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கும் ரோகித்- கோலி