‘Mrs & Mr’ திரைப்படப் பாடலுக்கு எதிராக இளையராஜா வழக்கு

Ilayaraja files case against 'Mrs & Mr' movie song

சென்னை, ஜூலை 11:

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படப் பாடலுக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ராபர்ட் மாஸ்டர், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்தார். அதில், வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள’மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ரஜினி – கமல் படத்தின் புரோமோ!

மகா சிவராத்திரி விழா – நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி, சாரா பங்கேற்பு

“ஜனநாயகன்” படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்