தொழிலாளர்களுடன் நான் நிற்கிறேன் – ராகுல் காந்தி

I stand with the workers - Rahul Gandhi

டெல்லி, பிப்ரவரி 12:

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்களை எதிர்த்து இன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டங்களையும் தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். தங்கள் உரிமைகளை பலவீனப்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.

வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இது கிராங்களின் வளர்ச்சியை பாதிக்கும். அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன்.

மேலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக நான் உறுதியாக நிற்கிறேன். நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர் என அதில் பதிவிட்டுள்ளார்.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு