தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்: முதலமைச்சர் பெருமிதம்

I fulfilled the promise made by my father: CM Stalin

சென்னை, நவம்பர் 25:

தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக, கோவை செம்மொழி பூங்கா திறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, 22.11.2021 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி. திடலில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

பல்வேறு வசதிகளுடன் மொத்தம் ரூ. 208.50 கோடி செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கோவையில் செம்மொழிப் பூங்கா: தலைவரும் தந்தையுமான கலைஞர் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன்!

அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்கா இதோ உங்களின் பார்வைக்கு…” என்று குறிப்பிட்டு வீடியோவை அவரது இணைய தளப் பக்கத்தில் இணைத்துள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை