கோபிசெட்டிபாளையம், செப்டம்பர், 06:
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பதற்கான’கெடு’ விதித்த பின்னர், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, “ஜனநாயக அடிப்படையில் என்னிடம் விளக்கம் கேட்கப்பட வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதால் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சொன்னேன். கட்சிப் பொறுப்புகள் பறிக்கபடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்புப் பணி தொடரும்,” அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டது வேதனையளிக்கவில்லை மகிழ்ச்சியே என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும், “இந்த கருத்துக்கு என்னது தனிப்பட்ட நலன் அல்ல, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு செய்தது. அதிமுகவிலே ஜனநாயகம் உள்ளது. யார் வேண்டுமானாலும் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூடவே இதையே பேசி வருகிறார்,” ஆனால் என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும் என்றார்.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஏழு பேரின் கட்சிப் பொறுப்புகளை நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டார்.