கோவை, ஜூலை 10:
கோவை: 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த ஆண்டு பா.ஜ.க. தலைவர் லால் கிருஷ்ண அத்வானியை கொலை செய்யும் நோக்குடன் அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் கோவையில் 18 இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சாதிக் (டெய்லர் ராஜா) சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்.