8
சென்னை,பிப்ரவரி 17:
தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை பார்ப்போம்.
- பள்ளி கல்வித் துறை – ரூ.48,534 கோடி
- உயர் கல்வித் துறை – ரூ.8,505 கோடி
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – ரூ.1,471 கோடி
- சிறப்பு திட்ட செயலாக்கத் துறை – ரூ.17,088 கோடி
- ஊரக வளர்ச்சித் துறை – ரூ.28,687 கோடி
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை – ரூ.718 கோடி
- நகராட்சி நிர்வாகத் துறை – ரூ.28,827 கோடி
- தொழிலாளர் நலத்துறை – ரூ.1,996 கோடி
- மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.22,090 கோடி
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை – ரூ.1,943 கோடி
- தகவல் தொழில் நுட்பத் துறை – ரூ.219 கோடி
- மின் துறை – ரூ.18,091 கோடி
- நீர்வளத் துறை – ரூ.10,076 கோடி
- போக்குவரத்து துறை – ரூ.13,062 கோடி
- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – ரூ.21,132 கோடி
- கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீனவர் நலத்துறை – ரூ.4,435 கோடி
- ஆதி திராவிடர் நலத்துறை – ரூ.3,934 கோடி
- சுற்றுலாத் துறை – ரூ.1,394 கோடி
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை – ரூ.1,634 கோடி
- தொழில் முதலீட்டு வர்த்தகத் துறை – ரூ.4,882 கோடி
- கூட்டுறவு மற்றும் உணவுத் துறை – ரூ.17,068 கோடி
- நீதி நிர்வாகத் துறை – ரூ.2,455 கோடி
- கைத்தறி மற்றும் கதர் துறை – ரூ.1,943 கோடி
- பொதுப் பணித்துறை – ரூ.1,694 கோடி
- வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை – ரூ.7,547 கோடி
- உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை – ரூ.15,111 கோடி