பர்மிங்காம், ஜூலை 21:
ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் இந்த தொடரில்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்புடையது என்ற காரணத்தால், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்தனர். இதனால் இந்த போட்டி முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளதாவது, “விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கும் மேடையாக இருக்க வேண்டும். அனைத்திலும் அரசியல் கலந்து கொண்டால் மக்கள், விளையாட்டு, நாடுகள் முன்னேற முடியாது.முறையான உரையாடலோ அல்லது தொடர்பியலோ இல்லாத போது எப்படி தீர்வு கிடைக்கும்.
இது மாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் நாம் சந்திக்க வேண்டிய அவசியத்தைத் தோற்றுவிக்கின்றன. ஒருசில மோசமான சம்பவங்கள், ஒருவரின் தவறு அனைத்தையும் பாதிப்பதாக இருக்கக் கூடாது” என்றும் அப்ரிடி தெரிவித்துள்ளார்.