சென்னை, ஜூலை 23:
தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜூலை 27-ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கடுமையான மழை தொடரும் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 29-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.மேலும், தமிழகத்திலுள்ள சில பகுதிகளில், குறிப்பாக புதுச்சேரி மற்றும் பிற துறைமுகப்பகுதிகளில் பலத்த தரைக்காற்று நிலவுகிறது. அதிகபட்சமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது