அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணியாற்ற உபயோகப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணம் ரூ.88 லட்சமாக (1,00,000 அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் புதிய உத்தரவாகும்.
இந்த கட்டண உயர்வு, அடுத்த 12 மாதங்களுக்கு செல்லும் என்கிறது. இது அதிக திறமையுடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் பெரும்பான்மையாக இந்த விசாவைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த கட்டண உயர்வு காரணமாக, பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் (மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகிள், ஐபிஎம், ஹெச்சிஎல், விப்ரோ போன்றவை) தங்களது எச்-1பி விசா பெற்ற ஊழியர்களுக்கு அமெரிக்காவில் தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்றும், நாட்டிற்குள் வெளியே செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளன.
அமெரிக்க வணிகத்துறை செயலாளர் பேசியதன்படி, நிறுவனம் ஒரு ஊழியர் அவசியமா அல்லது அமெரிக்கர் ஒருவரை பணியமர்த்த விரும்புகிறாரா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
எச்-1பி விசா என்பது அமெரிக்காவில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா ஆகும். சிறப்பு திறன் கொண்ட வேலைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிபுணர்களுக்கான விசா இது. இந்த விசா தொடர்பான கட்டணம் முன்னதாக சுமார் ரூ.19,000 முதல் ரூ.68,000 வரை இருந்தது, ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் உத்தரவின்படி 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) ஆக உயர்வு நடைமுறையில் உள்ளது.
இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறையில் கவலை தெரிவிக்கப்படுகிறது.மேலும் அமெரிக்காவில் உள்ள இளைஞர் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக தரப்படும் வாய்ப்பு அதிகம் என மதிப்பிடப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு அமெரிக்காவின் உள்நாட்டு வேலைவாய்ப்பு பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.