ஜிஎஸ்டி வரி குறைப்பு – எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

ADMK protest in Tambaram on dec.16th against the DMK government

சென்னை, செப்டம்பர் 04:

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளம் மூலம் மத்திய அரசின் சமீபத்திய ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை வரவேற்றுள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி பதிவிட்டதாவது, ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை வரவேற்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்கு பார்வையோடு தலைமை தாங்கிய வழிநடத்திய பிரதமர் மோடிக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜி.எஸ்.டி. வரியை கட்டமைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் நன்றி.

அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண்மை, காப்பீடு ஆகியவற்றை எளிமைப்படுத்தும் இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!