சென்னை, செப்டம்பர் 29:
வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்வைச் சந்தித்தது. காலையில் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை, மாலை நேரத்திலும் மேலும் 70 ரூபாய் உயர்ந்தது, இன்று ஒரே நாளில் மொத்தம் 130 ரூபாய் உயர்வு பதிவாகியுள்ளது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.10,770-க்கு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில், சவரனுக்கு 480 ரூபாய் மற்றும் மாலை 560 ரூபாய் அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.1,040 உயர்ந்தது. இதனால் சவரன் விலை ரூ.86,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 23-ம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் சற்று விலை குறைய தொடங்கியது. இதனால் தங்கம் விலை ரூ.84 ஆயிரத்துக்கு சரிந்தது.
ஆனால், மீண்டும் கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.