மாலையில் மீண்டும் விலை ஏறிய தங்கம்..!

Gold prices rise again in the evening!

சென்னை, பிப்ரவரி 03:

தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ந்தேதி கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்தது.

இதனையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து இறங்கிய நிலையில் இருந்தது.

இந்தநிலையில், திடீர் திருப்பமாக சென்னையில் காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.1,920 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் காலையில் ஒரு கிராமிற்கு ரூ.80 உயர்ந்தநிலையில் மீண்டும் ரூ.240 அதிகரித்து விற்பனை ஆகிறது. தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

காங்கிரஸுக்கு ஒரு எம்.பி. சீட் தருவதாக ஸ்டாலின் உறுதி – செல்வப்பெருந்தகை

தொகுதிப்பங்கீடு குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை தீவிரம்!!