சென்னை, நவம்பர் 06:
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.90,000 என்ற அளவை மீண்டும் எட்டியுள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000 ஆகவும், நேற்று மேலும் ரூ.560 குறைந்து ரூ.89,440 ஆகவும் விற்பனையாகி இருந்தது. இதனால், இரண்டு நாட்களில் மொத்தமாக பவுனுக்கு ரூ.1,360 சரிவு ஏற்பட்டது.
அதன்படி, கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.11,250 என்ற அளவிலும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000 என்ற அளவிலும் விற்பனை நடைபெற்று வருகிறது.
வெள்ளி விலையும் அதேநேரத்தில் சிறியளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.164 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1.64 லட்சமாகவும் விற்பனையாகிறது.