17
சென்னை, அக்டோபர் 21:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை திடீர் ஏற்றத்தைக் கண்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,180 ஆகவும், ஒரு சவரன் ரூ.97,440 ஆகவும் விற்பனையாகி வருகின்றது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.2,080 என்ற அளவில் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.5,600 உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.97,600 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை ரூ.1,600 மற்றும் தீபாவளி நாளான நேற்று ரூ.640 வரை குறைந்தது. ஆனால் இன்று மறுபடியும் தங்க சந்தையில் மீண்டும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.188-க்கும், ஒரு கிலோ ரூ.1,88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.