சென்னை, ஜனவரி 10:
2025-ம் ஆண்டில், தங்கத்தின் விலை ஏற்றம் அசாத்தியமானதாக இருந்தது. கடந்த ஆண்டு சுமார் 52 முறை புதிய உச்சங்களை எட்டியது. யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. இது நகை மற்றும் முதலீட்டு பொருட்களில் ஆர்வமுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது. நகை வாங்கும் நடுத்தர இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
அதன் பின்னர், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று குறைந்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கும், சவரன் ரூ.1,03,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.7,000 அதிகரித்து ரூ.2,75,000க்கும், கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.275க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.