மாலையில் சரிந்த தங்கம் விலை!

Gold prices rise again in the evening!

சென்னை, அக்டோபர் 21:

கடந்த சில வாரங்களாக இடைவிடாது உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென குறைந்தது. தன்னிலை தெரியாமல் ராக்கெட் வேகத்தில் ஏறி வந்த தங்கம், கடந்த 8ஆம் தேதி ஒரு பவுன் ரூ.90,000-ஐத் தாண்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டியிருந்தது.

தீபாவளி நாளான நேற்று விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தங்கம் விலை சிறிதளவு சரிவு கண்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.11,920 ஆகவும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.95,360 ஆகவும் விற்பனையானது.

இன்று காலை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440 எனப் பதிவானது. ஆனால் மாலை நிலவரப்படி தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.96,000 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.12,000 ஆகவும் விற்பனையாகிறது.

இதேவேளை, வெள்ளி விலையும் குறைவு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.6 குறைந்து ரூ.182 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விலைமாற்றத்தின் காரணமாக நகை விற்பனையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது கவனிக்கப்பட்டது. பொருளாதார நிபுணர்கள், சர்வதேச தங்க விலையில் ஏற்பட்ட சற்று சரிவும், உள்நாட்டு தேவையில் ஏற்பட்ட தளர்வும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை