தங்கம் விலையில் அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.2,400 குறைவு!

Gold and silver prices are rising again!

சென்னை, அக்டோபர் 22:

பொருளாதார சந்தையில் கடந்த சில வாரங்களாக உயர்வைத் தழுவியிருந்த தங்கம் விலையில், இன்று திடீர் சரிவு பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு சவரன் ரூ.93,600-க்கும், ஒரு கிராம் ரூ.11,700-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த வாரம் தங்கம் விலையில் மாறுபாடுகள் அதிகமாக பதிவாகின. அப்போது ஒரு சவரன் தங்கம் ரூ.5,600 உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.97,600 என்ற உச்சத்தை எட்டியது. தீபாவளி தினமான திங்கள்கிழமை விலை ரூ.640 அளவிற்கு குறைந்தது. அதன்பின்பு, செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.2,080 என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் மாலை நேரத்தில் ரூ.1,440 வரை சரிவைச் சந்தித்து, சவரனுக்கு ரூ.96,000 என விற்பனையாகியது.

அதன்பிறகு, இன்று காலை தங்கம் விலையில் மேலும் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை குறைவால் சந்தையில் வாங்குபவர்கள் மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளனர் என நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், வெள்ளி விலையிலும் இன்று சிறிய அளவு சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.180 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தங்க விலை மாற்றங்கள், டாலர் மதிப்பு மற்றும் உள்ளூர் தேவையில் ஏற்பட்ட குறைவு ஆகிய காரணங்களால் தங்க விலைகள் தொடர்ந்து மாறுபட்டு வருகின்றன.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!