சென்னை, ஜூலை 7:
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை சில நாட்களில் உயர்ந்து, பின்னர் திடீரென குறையும் நிலை தொடர்கிறது.
கடந்த மாதம் 14-ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,320-க்கும், ஒரு சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.9,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.