சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு – இன்று சவரனுக்கு ரூ.160 குறைவு!

Gold price drops Rs. 7,600 per sovereign!

சென்னை, ஆகஸ்ட் 01:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,200-க்கும், ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனையானது. அடுத்து விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்த வாரத் தொடக்கத்தில் திங்களன்று சவரன் ரூ.73,280, செவ்வாயன்று ரூ.73,200, புதனன்று சவரனுக்கு ரூ.480 (73,680), வியாழனன்று ரூ.320 குறைவு (73,360) என நிலவரம் காணப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. தொடர்ந்து வீழ்ச்சி அடையும் தங்கம் விலையால் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

மாலையில் மீண்டும் விலை ஏறிய தங்கம்..!

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு சரிவு

78 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!