சென்னை, அக்டோபர் 23:
கடந்த சில வாரங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மேலும் சரிவு கண்டுள்ளது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.3,680 குறைந்து ரூ.92,320 ஆக விற்பனையாகி இருந்தது. இன்று காலை அதனுடன் சேர்ந்து சவரனுக்கு ரூ.320 குறைவடைந்து ரூ.92,000 என பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து தற்போது ரூ.11,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நாட்களில் தீபாவளியன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.12,000-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து தற்போது ரூ.174 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,74,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.