புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.82,000 நெருங்கியது

Gold price drops Rs. 7,600 per sovereign!

சென்னை, செப்டம்பர் 12:

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

அந்தவகையில் கடந்த செவ்வாய்கிழமையன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.81,200-க்கு உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலை நிலைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,240 ரூபாய்க்கு விற்பனைக்காக உள்ளது. அதேபோல், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து ரூ.142 ஆகவும், பார் வெள்ளி கிராமுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,42,000-க்கு விற்பனைக்காக உள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை